பயிர் பாதுகாப்பு :: வாழைப் பயிரைத் தாக்கும் நோய்கள்

பூவிதழ் தேமல் நோய்‌‌:

தாக்குதலின் அறிகுறிகள்:
  • நோய்தாக்குதலானது , வாழையின் அடிப்பகுதி மற்றும் அதன் மையநரம்பு, இலைகளில் சுழல் வடிவ பிங்க் கலந்த சிவப்பு நிறமான கோடுகள் காணப்படுகிறது.
  • மஞ்சரிக் காம்புகளிலும் கோடுகள் காணப்படும்.
  • இலைகள்கொத்தாகவும் மற்றும்அரைபூர்த்தியுடைய நீள்மஞ்சரிக்காம்பு அதன் பண்புஅறிகுறிகளாகும்.
  • வைரஸ்அசுவினி பூச்சி மூலம் பரவுகிறது. வைரஸ் முதன்மையாக பாதிக்கப்பட்ட உறிஞ்சிகள் மூலம் பரவுகிறது.
   

 

  அடிப்பகுதியில் சிவந்தக்கோடுகள்   மஞ்சரிக்காம்பில் கோடுகள்   இலையின் மையப்பகுதியில் அடர் நிறம்

கட்டுப்படுத்தும் முறை:

உழவியல் முறை:

  • நோய் தாக்கிய கன்றுகளை உடனே அகற்றவேண்டும்.
  • களைகளை நீக்கி வயலைச் சுத்தமாக வைக்கவும்.
  • வயலில் எதுவும் பயிரிடப்படவில்லை எனினும் சுற்றியுள்ள களைகளில் நச்சுயிரிகள் தங்கியிருக்கும். ஆதலால் வயலைச் சுற்றிலும் எங்கும் களைகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • இந்நோய் பாதிக்கப்பட்ட வாழைக் கன்றுகளைக் கண்டறிந்து அவற்றை அழித்து விடவேண்டும்.

இயந்திரவியல் முறை

  • நோய் பரவுவதற்கு காரணமானஅசுவுணிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த  பாஸ்போமிடான் 1 மி.லி/லி அல்லது மெத்தில் டெமட்டான் 2 மி.லி/லி போன்ற மருந்துகளை தண்ணீர் மற்றும் ஒட்டுந் திரவத்துடன் கலந்து மரத்தின் மீது விசைத் தெளிப்பான் மூலமாகத் தெளிக்கவும்.  

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015